NGK – Movie Review | திரை விமர்சனம்

வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!

இந்த டெக் Youtubersலாம் Unboxing, Review னு எல்லாம் முடிச்சுட்டு ஒரு 6 மாசம், இல்லாட்டி ஒரு வருஷம் கழிச்சு அதே மாடல் Phoneஓட Review போடுவாங்க, அதுமாதிரி தான் இப்ப நாம இந்த Seriesல கொஞ்சம் மெல்லமா ஊரு அடங்குனதுக்கப்புறம் பொட்டிய தொறந்து Review பண்ண போறோம். இது எதுக்குன்னா அப்போதைக்கு அந்த படத்தை நாம கொண்டாடி தீர்த்துருக்கலாம், இல்லாட்டி தீர்த்துட்டு கொண்டாடி இருக்கலாம் ஆனா ஒரு காலத்துக்கப்புறம் அந்த படம் எப்படி இருக்குன்னு பாப்போம். இப்படி பாக்குறதால பல Bias இல்லாம நாம பாக்கலாம்.

1960போல ஸ்டான்லி குப்ரிக் Nuclear  War பத்தி Red Alert அப்படிங்கிற நாவலை வெச்சு ஒரு திரைக்கதை எழுதுறார். அதுல பீட்டர் செல்லர்ஸ் வெச்சு Dr. Strangeloveனு படமெல்லாம் எடுத்து முடிச்சாச்சு. அப்போ தான் கிட்ட தட்ட இதே கதையில 12 Angry Men  எடுத்த சிட்னி லூமெட், Henry Fondaவ ஹீரோவா வெச்சு Fail Safe அப்படிங்கிற கதையை படமா எடுத்துட்டுட்டாருன்னு தெரியுது. இதுல என்ன மேட்டர்ன்னா Fail Safe கதையும் Red Alert கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும், இதுனால கடுப்பான குப்ரிக் கேஸ் போட்டாரு. ஒருவழியா Dr. Strangelove படத்தை மொதல்ல ரிலீஸ் பண்ணிடறாரு. ஒரு 8 மாசம் கழிச்சு Fail  Safe ரிலீஸ் ஆகுது. Fail Safe படம் சரியா போகல. ரெண்டுமே நல்ல படம் தான், நியாயப்படி பாத்தா, Fail Safe ரொம்ப எதிர்பார்த்து வந்த படம், டைரக்டர் ஹீரோ காம்போ வேற தெரியான காம்போ. என்ன காமெடின்னா Dr. Strangelove காமெடி படம், அதுல ஹீரோல ஆரம்பிச்சு எல்லாத்தையும் வெச்சு செஞ்சுருப்பாங்க. அதுக்கப்புறம் அந்த கேரக்டரயெல்லாம் சீரியஸ் ரோல்ல மக்களால பாக்க முடியல. Henry Fonda கூட Dr. Strangelove பாத்துட்டு இத நான் முன்னாடி பாத்துருந்தா இந்த படமே நடிச்சுருக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

NGK Review

இப்ப எதுக்கு இந்த பிளாஷ்பேக்னு பாத்தா மாஸ் ஹீரோ(Literally & Figuratively) பத்தி பேசபோறோம்லே அதான். கிட்டத்தட்ட 2018லேயே வர வேண்டிய படம், எடுக்க நேரமாகி நேரமாகி படத்த ரிலீஸ் பண்றதுக்குள்ள RJ பாலாஜி சீக்கிரமா எடுத்து கிட்டத்தட்ட ஒரு கவுன்சிலர் எப்படி CM ஆகுறதுன்னு காமெடி படம் பண்ணிட்டு 2019 பிப்ரவரில ரிலீஸ் பண்ணிட்டாரு. நம்ம செல்வா சார் கொஞ்சம் பொறுமையா மே மாசம் ரிலீஸ் பண்ணினாரு. அதுக்குள்ள மக்களுக்கு அந்த காமெடி ரோல் செட் ஆகிடிச்சு அதனாலேயே NGKவ பெரிசா யாரும் எடுத்துக்க முடியல.

OTTல படம் பாக்கும்போது படம் நமக்கே கொஞ்சம் நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கும். தியேட்டர்ல நாம வேற எதிர்பார்ப்போடு போவோம், நாம எதிர்பாத்தது இல்லைன்னா செம்ம கடுப்பாகும், அதே தான் NGK நெலமையும். படம் வந்ததும் மக்கள் எல்லாரும் உரிச்சு தொங்கபோட்டுட்டாங்க. செல்வா சார் பாத்தாரு, நீங்க தானடா டீஸர் வந்தாலே குறியீடு போஸ்ட் போடுவீங்க, இப்ப நான் போடறேன் பாரு குறியீடு போஸ்டுன்னு அடிச்சு தள்ளினாரு. நம்ம YouTube மக்கள் பொழப்புழா அவர் கையவெச்சதால அவுங்கல்லாம் மீமீ போட ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியாக மொத்தமா அந்த படத்தை இழுத்து மூடிட்டாங்க.

இதெல்லாத்தையும் தாண்டி, படம் ரொம்ப எடிட் பண்ணின மாதிரியே இருந்துச்சு. பல சீன்ஸ் பாதியோட இருந்தாப்புல இருக்கும். நமக்கு மொதல்லேயே சொல்லிட்டாங்க இது மாஸ் ஹீரோ படம், அப்புறம் அதுக்கேத்தாப்புல நாமளும் செட் ஆயிட்டோம். ஆரம்பமும் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஊனா இந்த ஆர்கானிக் பார்மிங் தேவையே இல்லைன்னு தோணுச்சு. இப்படி இருந்த நல்ல மனுஷனா அரசியலுக்கு வந்து இப்படி ஆகிட்டாருன்னு நெனைக்கிற அளவுக்கு அரசியல்வாதியா மாறுறாரு. எல்லாத்தையும் ரெண்டரை மணி நேரத்துல சொல்றதுங்கிறது ரொம்ப கஷ்டம். ஆனாலும் பாத்தீங்கன்னா படத்துல உங்கள உக்கார வைக்கிறது சூர்யா தான். அவருக்கு நடிப்பு நல்லாவே வரும், நல்லாவே பண்ணிருக்காரு. ஆனா சாய் பல்லவி ரோல் தான் கொஞ்சம் எரிச்சலாகுது. சில நேரத்துல எல்லாரும் செல்வா சார் படம், கொஞ்சம் நல்லாவே பண்ணிருவோம்னு எக்ஸ்ட்ராவா பண்ணின மாதிரி தோணிச்சு.

சில பல பாட்டையெல்லாம் தூக்கிட்டு, புதுப்பேட்டைல பண்ணின மாதிரி, கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணிருந்த இந்த படம் இன்னும் நல்லாவே இருந்துருக்கும். ஒரு கலைஞனை அவசரப்படுத்தினா என்னாகும்னு நமக்கே தெரியுது. இதுல யாரையும் நாம தப்பு சொல்ல முடியாது, ஒரு வேள செல்வா சார் ரசிகர்கள் ஹாலிவுட்ட பாத்து #ReleaseTheSelvaSirCutனு ட்ரெண்ட் பண்ண வைக்கலாம், இப்படி தான் இல்லாத ஒன்னை ட்ரெண்ட் பண்ண வெச்சு உருவாக்கலாம், ஐடியா இல்லாத பசங்க. அப்பவாச்சும் கொஞ்சம் பதுசா எழுதி 4 மணிநேரத்துக்கு ஆற அமர பாக்குறாப்ல ஒரு அருமையான படம் கிடைக்கும்.

Leave a Reply