Puli – Movie Review | புலி – திரைவிமர்சனம்

Puli is 2015 Fantasy Tamil Movie Starring Thalapathy Vijay, Sudeep, Sridevi, Shruthi Haasan and Hansika. The movie is directed by Chimbu Devan.

காலம் போன காலத்துல இதெல்லாம் உனக்கு தேவையான்னு கேக்குற மாதிரி, 5 வருஷத்துக்கு அப்புறம் இந்த வேலை தேவையான்னு எனக்கே தோணுச்சு. ஆனாலும் மக்களே, நான் லாம் சிம்பு தேவன் கன்னி, காலேஜ் கட் அடிச்சுட்டுல்லாம் புலி படத்துக்கு மொதநாள் மதுரைல போய் பார்த்தேன். அதுனாலயோ என்னவோ இப்பவாச்சும் எழுதிருவோம்னு  தான்.
ஆரம்பத்துலயே சொல்லிடறேன், இந்த பதிவு புலி படத்த வெச்சு செய்றதுக்கு இல்லை. அதெல்லாம் செஞ்சு முடிச்சுட்டாங்க. இது ஒரு ஆதங்க பதிவு தான். பேன்டஸின்னு தமிழ் சினிமால எடுத்தாலே இப்ப இருக்குறவங்கல்ல சிம்பு தேவன் கண்டிப்பா தரமா பண்ணுவாருன்னு நம்மில் பல ஆயிரம் பேருல நானும் ஒருத்தன். அந்த நம்பிக்கையில தான் மொத நாள் படத்துக்கு போனேன். எப்படி தலைவர் படத்தை மொத நாள் பாத்தா கதை லாம் நினைவுல இருக்காதோ, அதே மாதிரி தளபதிக்கும் அதே நெலமை தான். 3 நாளைக்குள்ள படத்தை வெச்சு செஞ்சு, பாடை கட்டிட்டாங்க. இந்த ஊரு சொல்றத கேட்டு நானும் காண்டாயிட்டேன். 
ஆனா ஒரு சிம்பு தேவன் படத்துல என்ன இருக்குமோ, அதெல்லாம் இருந்துச்சு. ஒரு பேண்டஸி படத்துல நாம என்ன எதிர்பாக்குறோமோ அதெல்லாம் இருந்துச்சு, ஆனாலும் எங்கயோ எதோ மிஸ் ஆனமாதிரி இருந்துச்சு. அந்த ஒரு விஷயத்துல தான் படம் அடி வாங்கிருச்சு. இந்த படத்துல எனக்கு புடிச்ச, புடிக்காத விஷயத்தை பத்தி கொஞ்சம் ஆழமா பாக்கலாம்.


புடிச்சதும் புடிக்காததும் :மொதல்ல இந்த படத்தோட கதைக்கும் பாஹுபலி கதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ரெண்டும் ஒன்னு தான். ஆனா இது  பக்கா அம்புலி மாமா கதை. அதுமட்டுமில்லாம சிம்பு தேவனைவிட அம்புலி மாமா கதையை வேற யாரும் அருமையா எடுக்க முடியாது. நானெல்லாம் புலிகேசி ஜோக்ஸ் படிக்கறதுக்காகவே விகடன் வாசகர் ஆனவன், அதுனால கொஞ்சம் எதிர்பார்ப்பு எனக்கு அதிகமாவே இருந்துச்சு.
படம் ஆரம்பிச்சு கதைக்குள்ள போகுறதுக்குள்ள 2 பாட்டு வந்துருச்சு. கதையை establish பண்றதுக்கு எடுத்துக்கிட்ட நேரம் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருந்துச்சு. அதெல்லாத்தையும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி Character Establishment சீக்கிரம் பண்ணிட்டு ஹீரோயினை தேடுற படலத்தை சீக்கிரம் கொண்டு வந்துருந்தா படம் இன்னும் பெட்டரா இருந்துருக்கும். 
பாட்டு கொஞ்சம் தேவையில்லாத ஆணின்னு சொன்னக் கூட நம்ம DSP ரீரெக்கார்டிங்ல பின்னியிருப்பாரு. புலி புலின்னு தீம் மியூசிக்ல அவரை வெச்சு செஞ்சாலும் நல்லா தான் இருந்துச்சு. சொல்லப்போனா fight சீன்ல எல்லாம் மியூசிக் ரொம்ப நல்லாவே ஒர்க்கவுட் ஆச்சு. படத்தோட ஹைலைட்ன்னு சொன்னா இன்ட்ரோ Fight, வேதாளம்னு prove பண்ணுற fight அப்புறம் கிளைமாக்ஸ் fight . இது எல்லாத்துலயும் மியூசிக் தாறுமாறா தான் இருன்துச்சு. அதுவும் கிளைமாக்ஸ் fight விட வேதாளம் சோலோ fight ரொம்பவே நல்லா இருந்துச்சு. இன்னைக்கு தேதிக்கு தளபதி விஜய விட்டா வேற யாராலயும் வாள் சுத்த முடியாது, அதுவும் அந்த fightல ஒரு சிரிப்போட சொழட்டுவாரு பாருங்க, அதெல்லாம் அப்போவே அவரு தான் அடுத்த MGR னு ஊருக்கு சொல்லிட்டாரு. 

புலி திரை விமர்சனம்
புலி திரை விமர்சனம்

 இதெல்லாம் தளபதிய வெச்சு மட்டும் தான் பண்ண முடியும். இத வேற யாரோ கேட்டுட்டு வேற மாதிரி வெச்சு பண்றங்க அதுக்கு அடியேனோ, கம்பெனியோ பொறுப்பாகாது. 
இதப்போலவே பேன்டஸின்னு எடுத்துக்கிட்டா Landscape ஷாட்ஸ் ரொம்ப முக்கியம். இந்த படத்துல அதெல்லாம் ரொம்ப நல்லாவே வந்துருக்கும். Exampleக்கு இந்த ஷாட் எனக்கு ரொம்ப புடிச்ச ஷாட்.

புலி poster
புலி poster

நட்டி தான் படத்தோட கேமராமேன் அவரும் நல்லாவே பண்ணிருப்பாரு. பேண்டஸி படத்துல விசுவல் சொதப்புனா படத்தோட மொத்த உழைப்பும் நாசமா போய்டும் அதெல்லாம் காப்பாத்தி இருப்பாரு நம்ம நட்டி. ஆக விஷுவல்ஸ் நல்லா இருந்துச்சு, மியூசிக் நல்ல இருந்துச்சு, தளபதி விஜயும் செம்மயா இருந்தாரு அப்புறம் எப்படி படம் மட்டும் சொதப்பிச்சுன்னு பாத்தா கதை, திரைக்கதை, வசனம் மற்றும் நடிப்பு.
அம்புலி மாமா கதைன்னாலே அது குழந்தைங்க கதை, அதுக்கேத்த மாதிரி எடுக்கணும். அப்புறம் கதைக்குள்ள நேரா போயிறணும் இல்லாட்டி மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுரும். தளபதி விஜய் மாதிரி ஒரு ஸ்டார் இருந்தா தான் நம்ம ஹீரோன்னு நம்புவோம், அதே மாதிரி சிரிச்சுன்னே வாளை சொழட்டுறதுலாம் ஒரு கலை, அதுக்கேத்த மாதிரி வில்லனும் மாஸா இருக்கணும். இதுல ஸ்ரீதேவி கிட்ட தட்ட Maleficent மாதிரியே இருப்பாங்க ஆனா அவுங்களையும் சரியா use பண்ணல. சுதீப் பாவம், ஆனா அந்த கேரக்டர் அவருக்கானதுங்கிறதுல எந்த மாற்று கருத்தும் இல்ல.

Puli sridevi

ஒரு வேளை, ரெண்டு பாட்டை கட் பண்ணிட்டு, முழுசா அம்புலி மாமா கதையா மாத்திட்டு, MGR ஹீரோன்னு நெனச்சுட்டு எழுதி இருந்தா இந்த படம் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை கொண்டு வந்துருக்கும். ஆனா எல்லாத்தையும் பண்ண நெனச்சு கடைசில எதுவா இருக்கோம்னு தெரியாம போய்டுச்சு. இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா அடுத்து இதே மாதிரி ஒரு சரித்திர படத்துல தளபதி நடிக்கிறதா கலாட்டாலேயே சொல்லிட்டாங்க, அதுனால நல்லா வந்துருக்க வேண்டிய படம் இப்படி ஆயிடுச்சேன்னு ஆதங்கத்துல இந்த போஸ்ட். இப்பவும் நீங்க இந்த படத்தை SUN NXT ல பாக்கலாம்.
https://www.sunnxt.com/movie/detail/7224


1 thought on “Puli – Movie Review | புலி – திரைவிமர்சனம்

Leave a Reply